Wednesday, January 25, 2017

"True Friends are always there"



This shows the number of  messages per month per year since Jipmerian group started. Pushpa, no need to be concerned!
You can see this info always here (scroll down to the bottom): https://groups.yahoo.com/neo/groups/jipmerians/info

Saturday, January 14, 2017


பொங்கல் வாழ்த்து
-----------------------------------

பொங்கலொன்றும் சந்தைக்கடைச் சாகசத் திருவிழாவல்ல
சென்றோம் களித்தோம் திரும்பினோம் வீடென்பதற்கு!

முத்தான உயிர்காக்க சத்தான உணவுப்பொருள்
வித்திட்டு விளைவிக்க அயராது ஐந்துதிங்கள்
கழனியில் காத்திட்ட உழவர் களிப்போடு
அறுத்தெடுத்த நெற்கொண்டு அரிசிதனை யெடுத்து
நிலமகளைத் துதித்திடும் நிறைவான நாளிது!

நீரின்றி நிலத்தில் விளைச்சலின்றி
நெல்லரிசிப் பொங்கலில்லை யினியதனால்
மானிடரிடை மனித நேயம் பொங்கட்டும்!
மாறாத அன்பு மலர்ந்தே பொங்கட்டும்!
ஏனிந்த இழிநிலை இயற்கைக்கு எனும்
விழிப்புநிலை இதயத்தில் பொங்கட்டும்!
இயற்கையன்னை மலடகற்றியவள் கருக்கொள்ள
என்னவழி செய்வோமெனும் சிந்தனை பொங்கட்டும்!
இருக்கும் இடத்தில் பொருட்கள் விளைவிக்க
அடைத்த வழிகளைத் திறக்கும்நிலை பொங்கட்டும்!

பொங்குக பொங்கல்!
பொல்லாங்கு மனிதரிடையில்லாது
பொங்குக பொங்கல்!

14-1-2017.



கிருத்திகா, கார்த்திக், மங்கையர்க்கரசி, இரத்தனசாமி.

Saturday, January 7, 2017

manju virattu (the bull fight game)



மஞ்சு விரட்டு (பொங்கல் வீர விளையாட்டு???) 


காட்டில் வாழ்ந்திருந்து கல்லையே ஆயுதமாக்கி
விலங்கை வேட்டையாடினான்  கற்கால மனிதன்
நாடென்று வந்த பின்பு நன்மை தரும் விலங்குகளை
நன்றாகப்  பழக்கி விட்டு அடக்கிப்  பயன் பெற்றான்

பசு உண்டு பால் கொடுக்க,  அசுவமுண்டு வண்டியோட்ட
காளையுண்டு நிலத்தை உழ,  கழுதையுண்டு பொதி சுமக்க
யானை உண்டு சுமை தூக்க அரச குடும்பம் அமர்ந்து போக
போருக்குச்   செல்ல குதிரைப்படை, யானைப்படை

விலங்குகளை அடக்கி வைக்க  அவசியமுண்டு அந் நாளில்
அடக்குவதே வீரமென்று அறிவுறுத்திய காலமது
காளையை அடக்கினால்   பொன்னும், பெண்ணும்
பெண் மேற் காதலால் அடக்க வந்த காளையர்  பலர்

இன்றோ விஞ்ஞானத்தின் இமாலய வளர்ச்சி
இயந்திரங்கள் வந்தன விலங்கை விலக்கி
வயலை உழ ட்ராக்டரும் மோட்டோரும்
வண்டி இழுக்க பெட்ரோலும் டீசலும்

வீரக்காளையை விலங்கிட்டு வளர்த்து
கொம்பை மழித்துக்  குப்பி போட்டு விட்டு
கூட்டமாய்  மக்கள் வேடிக்கை பார்க்க
அடக்க ஓடுவது அது என்ன வீரம்?

அடி  பட்டால் துடிதுடிப்பது
உன் மாதாவும் மனைவியும்
உயிர் பிரிந்தால் அநாதையாவது
உன் பத்தினியும், குழந்தையும்

நாட்டு மக்கள் நலமாய் இருந்திட
வீடு துறந்து, தம் மக்கள் மறந்து
காட்டிலும், மேட்டிலும், மழை, பனியிலும்
நாடோடியாய்த் திரியும் ராணுவ வீரர்கள்

எதிரிகள் வராமல் எல்லையைக் காத்து
என்றும் சாவை எதிநோக்கி வாழ்ந்திடும்
உணவும், உறக்கமும், ஓய்வும் மறந்திடும்
உன்னதத் தியாகிகள் (அவரே) சுத்த வீரர்கள்

உயிர் உனக்குத் துச்சமென்றால்
தியாகம் செய்யத் தயாரென்றால்
வீரத்தை வெளிக்காட்ட வேட்கையென்றால்
எல்லைக்கு ஓடு, ராணுவ வீரனாய்!

புஷ்பா விஸ்வநாதன் .