Happy New Year 2017!
.
இன்னுமொரு ஆங்கிலப் புத்தாண்டு
இன்று பிறந்து துளிர்க்கிறது!
.
இன்று மறைந்த இவ்வாண்டில்
இதய சுத்தியுடன் இயன்ற வகையில்
இன்னலெவர்க்கும் இழைக்காமல்
இருந்திருந்தால் தொடர்வோம் இதையே!
.
உணர்வு வயப்பட்டு மதி மயங்கி
ஊறு எவர்க்கேனும் விளைத்திருந்தால்
உள்ளம் அறிந்ததை உணர்த்தியவுடன்
உற்றவிடருகாய்க் கேட்போம் மன்னிப்பை – உடனே!
.
வருமிவ்வாண்டு மானிடர்க்குத் தெளிந்த மனத்தூய்மையையும்
வற்றாத அன்பினை வழங்கும் மனநிலையையும்
வையத்தில் மனிதநேயத்தை வாழ்வாங்கு வாழவைத்தும்
வரலாற்றில் இடம்பெறும் வகையில் அமையட்டும்!
No comments:
Post a Comment