Monday, September 26, 2016

அறிமுக வாழ்த்து!
----------------------------------

கடலோரம் புதுவை
அலையாடும் கடல்நீர்
நீர்பரப்புக் கண்டு நெஞ்சினில் குளிர்ச்சி
தண்ணீரே குளிர்ச்சியன்றோ யதனால்
தண்ணீர் கண்டாடும் புதுவை யானாலும்
தள்ளாடாத மனமுண்டு பலருக்கிங்கு
சுவரின்றிச் சித்திரமில்லை யதுபோல்
உடல்நலமின்றி உயர் மனமிருந்தென்ன
உடலுரம் கூட்ட வதன் நோய்தணிக்க
உருவான உன்னத மருத்துவக் கல்வி
ஆராய்ச்சி நிருவனம் ஜிப்மர்
உருவாகினரதில் ஒப்புயர்வற்ற அறிஞர்கள்
அறிவியலாளர்கள் ஆழிசூழ் உலகின்
அனைத்துக் கண்டத்தையும் ஆட்கொண்டனரின்று
அவர்தம் ஆக்கங்கள் பகிர அதனூடே
அங்குருவாகும் இளைஞர்களுக்கும் ஊக்கங்கள் ஊட்ட
உருவாகியது ஜிப்மெரியன் யாகூ மின்னஞ்சல்குழு
ஆயினும் அடங்கவில்லையவர் தாகம்
ஆக்கினர் இன்றோர் வலைப்பதிவு (blog)
அதன் பிரம்மா இராவ்காரு
அவர் வழிகாட்ட அனைவர் பங்களிப்போடே
ஆல் போல் தழைக்க விம்முயற்சி
அருகுபோல் வேரூன்றவே இவ்வலைப்பதிவு
அன்றாடம் அதற்கேற்ற நீர்பாய்ச்சி
அது கிளைக்கச் செய்கவே நம் ஜிப்மெரியன்

வலைப்பதிவாளர்கள் வானுயரச் செய்கவே இதை!

2 comments:

  1. Good going Swami!
    If you could also add a gist of what it is about, the rest of the tamil-challenged readers will be able to appreciate.

    ReplyDelete
    Replies
    1. Here is the translation.....
      Introductory wishes:
      Pondy is a seaport.Sea water moves as waves.Minds get cooled down looking at the sea waves;so there are minds which do not stagger with the other kind of water which is also flowing here.
      There is no drawing without a canvas; similarly without health what is the purpose of a great mind.In order to improve health care and tackle the diseases, JIPMER had been instituted to give medical education and to do research. Scientists who came out of this institution got spread world wide. Today, in order to share their achievements and to encourage the youngsters dedicated yahoo website was started. As their thirst did not get quenched, they have started a blog site. Raogaru is the brahma of the same.With his guidance everybody is participating; let this blog site become as strong as a banyan tree and deep rooted as the durva grass. Let all JIPMERIANS partcipate and nurture the same.

      Delete