உலக இதய நாள் – செப்டெம்பர் 29.
-------------------------------------- ------------------------
இதயமே இல்லாமல்
இங்குவாழும்
இரும்புமனங்கள்
இனியாவது இளகி
இவ்வையமெங்கும்
இன்னலற்ற இலக்கடைய
இவ்விதயநாளில்
இதையங்கனிந்து இறைஞ்சுவோம்!
.
மனவழுத்தமற்ற எளிய
வாழ்வைக் கடைப்பிடித்துப்
புகைப்பழக்கம்
தவிர்த்துச் சரிவிகித உணவுண்டு
தக்க உடல்வேலைகள்
செய்து தகாதக் கொழுப்பைக் கரைத்து
நம் இதயம் காக்க
இவ்விதய நாளில் உறுதியேற்போம்!
No comments:
Post a Comment