நாளை வரும் தீபாவளி
நாளை வரவேற்போம்!
----------------------------------------------------------------------
வரவேண்டும் தீபாவளி!
வருமது தரவேண்டும்
மானிடர்க்கு
வளனுடன் வாழ்விலொளி!
வருகின்றது தீபாவளி!
வருகின்றவது கொணரவேண்டும்
மனிதர்க்கு
வற்றாத நலனுடன்
நல்வாழ்வுக் களி!
காத்திருப்போம்
தீபாவளிக்கு!
கார்மேகம் குறைவிலாது
கனமழை தருமெனு
மொளிக்கீற்றுடன்!
வருமிந்தத் தீபாவளி
வாழ்விலுறை ஏற்றத்
தாழ்வகற்ற
வைக்கும் தீப்பொறியி
னொளியாகட்டும்!
வரவேற்போம் நாளைய
தீபாவளியை
வறுமையற்ற உலகையும்
சிறுமையற்ற அறிவையும்
தன்முனைப்பற்ற
மாந்தரையும்
தனதன்றிப் பிறர்
நலமும்காணும்
தன்னலமற்ற தகையையும்
தரணியில் வாழுமுயிரனைத்தையும்
தன்னுயிரா யோம்பும்
தரமான மனதினையும்
தருகவித் திருநாளெனவிதை
தலைநிமிர்ந்து
வரவேற்போம்!
வருகவே தீபாவளி
வந்தனைவர் மனதிலும்
நிறைகவே
மறுவற்ற அகவொளியாய்!
திருவள்ளுவராண்டு 2047, ஐப்பசித் திங்கள்
12.
28-10-2016

No comments:
Post a Comment